×

புழல் சிறையில் கைதிக்கு சரமாரி அடி, உதை: போலீசார் விசாரணை

புழல்: புழல் சிறையில் கைதிக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் மத்திய விசாரணை சிறையில் சுமார் 3500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களை உறவினர்கள், பொதுமக்கள் அவ்வப்போது பார்த்து விட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் திடீரென 2 கைதிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே சிறை காவலர்கள் விரைந்து வந்து இருவரையும் சமாதானம் செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த இமானுவேல் (21) என்ற கைதிக்கும் ஓட்டேரி சூர்யா (23), புழல் காவாங்கரை நித்தின் குமார் (23), வில்லிவாக்கம் பார்த்திபன் (20), நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (22) ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்கள் 4 பேரும் இமானுவேலை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த இமானுவேலை சிறை காவலர்கள் மீட்டு, சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். புகாரின்பேரில், புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post புழல் சிறையில் கைதிக்கு சரமாரி அடி, உதை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Puzhal Jail ,Puzhal ,Puzhal Central… ,Dinakaran ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!