×

வேளாண் வணிகத் துறை சார்பில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம்: சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்பு

ஆவடி: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு வாரமும் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும் என ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில், ஆவடி சட்டமன்ற அலுவலகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் உழவர் சந்தை மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் பங்கேற்றார்.

அவர் பேசுகையில், ஆவடியில் உள்ள உழவர் சந்தையால் விவசாயிகளுக்கு கிடைத்திடும் வசதிகள் மற்றும் நுகர்வோர்கள் பெறும் வசதிகள் குறித்து விளக்கினார். விவசாயிகள் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து அவற்றை உடனடியாக செய்து தர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வேளாண் நல திட்டங்களையும் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் நலத் திட்டங்களையும் விவசாயிகளுக்கு விளக்கினார்.

இதில், ஆவடி மாநகர மேயர் ஜி.உதயகுமார், வேளாண்மை விற்பனை இணை இயக்குனர் விஜயகுமாரி, ஆவடி மண்டல சேர்மன் ஜோதிலட்சுமி நாராயண பிரசாத், ஆவடி மாநகர பொறுப்பாளர் சன்பிரகாஷ், பகுதி செயலாளர்கள் பேபி சேகர், பொன் விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post வேளாண் வணிகத் துறை சார்பில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம்: சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Department of Agriculture ,Nassar ,Awadi ,Department of Agricultural Sales and Agri-Commerce ,Tamil Nadu ,President ,G.K. ,Stalin ,Department of Agri-Commerce ,MLA ,Dinakaran ,
× RELATED மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்துவது எப்படி?