
- பாக்கிஸ்தான்
- நவாஸ் ஷெரீப்
- இஸ்லாமாபாத்
- பிரதமர் நவாஸ் ஷெரீப்
- பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ்
- பி.எம்.எல்-என்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அக்.21ம் தேதி நாடு திரும்புகிறார் . பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்-என்) தலைவர் நவாஸ் ஷெரீப் 2016ம் ஆண்டு, சொத்துக்களை மறைத்ததற்காக 2017ல் உச்ச நீதிமன்றம் அவரை வாழ்நாள் முழுவதும் தகுதி நீக்கம் செய்தது. அல்-அஜிசியா மில்ஸ் வழக்கில் 7 ஆண்டு சிறைதண்டனை பெற்ற அவர் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். 73 வயதான நவாஸ், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல லாகூர் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, 2019ம் ஆண்டு நவம்பரில் லண்டன் சென்றார். அதன்பின் நாடு திரும்பவில்லை. தற்போது பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நவாஸ் ஷெரீப் அக்டோபர் 21ம் தேதி லண்டனில் இருந்து நாடு திரும்புகிறார்.இந்த தகவலை தற்போது லண்டனில் இருக்கும் அவரது இளைய சகோதரரும், முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
The post பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அக்.21ல் நாடு திரும்புகிறார் appeared first on Dinakaran.