×

திருப்போரூரில் வீடுகளுக்கான பாதாள சாக்கடை இணைப்பு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருப்போரூர்: திருப்போரூரில் வீடுகளுக்கான பாதாள சாக்கடை இணைப்பு ம் பணியினை மண்டலம் பேரூராட்சி உதவி இயக்குனர் லதா, எம்எல்ஏ பாலாஜி, ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளிலும் சுமார் ரூ.53 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. பேரூராட்சிக்கு உட்பட்ட 4 மாடவீதிகள், சான்றோர் வீதி, வணிகர் வீதி, ஓஎம்ஆர் சாலை உள்ள பெரும்பாலான தெருக்களில் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டு விட்டன. மேலும், வீடுகளில் இருந்து பிரதான குழாய்களுக்கு இணைப்பு அளிப்பதற்கான சிறிய குழாய்களும் அமைக்கும் பணி தொடங்கி முடிந்து விட்டது.

இந்நிலையில், சோதனை முயற்சியாக 100 சதவீத பணி முடிந்த பகுதிகளில் இருந்து வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கண்ணகப்பட்டு பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் அனு சிபிசக்கரவர்த்தி வரவேற்றார். பேரூராட்சி துணை தலைவர் பரசுராமன், செயல் அலுவலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சிபுரம் மண்டலம் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் லதா, திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன் ஆகியோர் வீடுகளுக்கான பாதாள சாக்கடை திட்டத்திற்கான இணைப்பு பணிகளை தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து, இத்திட்டத்திற்காக காலவாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு மையத்தையும் பார்வையிட்டனர். விரைவில், பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு அனைத்து தெருக்களுக்கும் வீட்டு இணைப்பு வழங்கப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

The post திருப்போரூரில் வீடுகளுக்கான பாதாள சாக்கடை இணைப்பு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Tirupporur ,Assistant Director ,Latha ,Balaji ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...