×

குடிநீர், கழிவுநீர் குழாய் பிரச்னையை கண்டுபிடிக்க ஏஐ தொழில்நுட்பத்தில் ரோபோ கண்டுபிடிப்பு: சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சி மாணவர்கள் உருவாக்கினர்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யின் ஆராய்ச்சி மையத்தின் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் (ஏஐ) ரோபோ கண்டுபிடித்துள்ளனர். குடிநீர், கழிவுநீர் குழாய்கள் எந்த அளவில் இருந்தாலும், அதற்குள் இந்த ரோபோவை அனுப்பி எந்த இடத்தில் என்ன பிரச்னை இருக்கிறது, அதனை எவ்வாறு சரி செய்ய முடியும் என்பதற்கான தீர்வை வழங்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினர். மேலும் குழாய் வழியாக அனுப்பப்படும் ரோபோ அதில் உள்ள அனைத்து விஷயங்களையும் துல்லியமான வீடியோவாக எடுத்து அதனை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துக்கு தெரிவிக்கும். அந்த தொழில்நுட்பம் அதற்கு என்ன மாதிரியான தீர்வை வழங்கலாம் என ஆலோசனையை வழங்கும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு ‘ஸ்வாத்’ என்றும், ரோபோட்டுக்கு ‘என்டோபோட் சிவர்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இவ்வகையான தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோவை பயன்படுத்துவதால், நேரம், செலவு சேமிக்கப்படுகிறது. மேலும் குறைபாடு, உடல் உழைப்பை குறைக்கும். இது மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.

The post குடிநீர், கழிவுநீர் குழாய் பிரச்னையை கண்டுபிடிக்க ஏஐ தொழில்நுட்பத்தில் ரோபோ கண்டுபிடிப்பு: சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சி மாணவர்கள் உருவாக்கினர் appeared first on Dinakaran.

Tags : IIT Chennai ,CHENNAI ,IIT ,
× RELATED சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம்: பேராசிரியர் ஆசிஷ்குமார் சஸ்பெண்ட்