×

புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்து மொபட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்றவர் கைது: 450 பாட்டில்கள் பறிமுதல்

பெரம்பூர்: கொளத்தூர் உதவி கமிஷனர் சிவகுமார் தலைமையில், ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார, நேற்று ராஜமங்கலம் ரெட்டேரி சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மொபட் ஒன்றை மடக்கி பிடித்தனர். அதில், 50 மது பாட்டில்கள் இருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர், ஐயப்பன்தாங்கல், நாகாத்தம்மன் நகரை சேர்ந்த ஜெகந்நாதன் (70) என்பதும், இவர், பாண்டிச்சேரியில் இருந்து குறைந்த விலையில் மது பாட்டில்களை கடத்தி வந்து, அவற்றை தனது மொபட்டில் வைத்து ராஜமங்கலம், வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் விற்று வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரது வீட்டில் சோதனை செய்தபோது அங்கு 400 மது பாட்டில்கள் இருப்பது தெரிந்தது. மொத்தம் 400 குவாட்டர் பாட்டில்கள், 50 புல் பாட்டில்கள் என 450 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், ஜெகந்நாதன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்து மொபட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்றவர் கைது: 450 பாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Perambur ,Kolathur ,Assistant Commissioner ,Sivakumar ,Rajamangalam ,Inspector ,Murthy ,Rajamangalam Rederi ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு