×

பெகாசஸ் சி12ஐ இஎக்ஸ்

பெகாசஸ் நிறுவனம், சி12ஐ இஎக்ஸ் என்ற பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு சி12ஐ மேக்ஸ் என்ற ஸ்கூட்டரை அறிமுகம் செய்திருந்தது. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.1,26,153 என நிர்ணயிக்கப் பட்டிருந்தது. அறிமுகம் செய்து 3 மாதத்திலேயே 6000 ஸ்கூட்டர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டது. இந்த வரவேற்பை தொடர்ந்து சி12ஐ இஎக்ஸ் பிரீமியம் ஸ்கூட்டரை அறிவித்துள்ளது. அறிமுகச் சலுகையுடன் ஷோரூம் விலையாக சுமார் ₹99,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 2 கிலோவாட் அவர் லித்தியம் அயன் பேட்டரி இடம் பெற்றுள்ளது.

முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கி.மீ தூரம் வரை செல்லும் என, அராய் சான்று வழங்கியுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் ஆகும். ஐபி-67 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 2500 வாட் மோட்டார் இடம் பெற்றுள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், கோம்பி பிரேக்கிங், சைடு ஸ்டாண்டு சென்சார் உள்ளது. எக்கோ, ஸ்போர்ட் என இரண்டு டிரைவிங் மோட்கள் உள்ளன.

The post பெகாசஸ் சி12ஐ இஎக்ஸ் appeared first on Dinakaran.

Tags : Pegasus ,Dinakaran ,
× RELATED நட்சத்திரப்படி வணங்க வேண்டிய பைரவஸ்தலங்கள்