
சென்னை: மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்படி விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். தமிழ்நாடு வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு எதிராக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஹரிஹரன் என்பவர் மனு அளித்திருந்தார். சிலை கரைப்பு தொடர்பாக முறையான வழிகாட்டுதல் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் விசாரணை செப்.20க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை நீரில் கரைப்பதற்கு பதிலாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல் பின்பற்றி கரைப்பதற்கு சேர்க்கையான நீர்நிலையங்களை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் சென்னை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில் ஆறு, ஏறி, குளம், மற்றும் வீடுகளில் சிலைகளை கரைப்பதற்கு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்துள்ள விதிகளை முறையாக பின்பற்ற வேண்டியதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதே சமயம் தமிழக அரசு தரப்பில் சேர்க்கை நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதால் அதில் ஏற்படக்கூடிய கழிவுகளை உள்ளாட்சி சுத்தம் செய்யவேண்டிருப்பதாகவும், இந்த விவகாரத்தை பொறுத்தவரை சிலைகளை கரைப்பதற்கு முறையான வழிகாட்டுதல்கள் அணைத்து ஆட்சியர்கள் அனுப்பட்டுள்ளதகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினுடைய வழிகாட்டி விதிமுறையின்படி தான் சிலைகள் கரைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமிழ்நாடு சுற்றுசூழல், வனம், மற்றும் காவல்நிலை செயலாளர் தலைமையில் பொதுத்துறை செயலாளர் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வரியா தலைவர் அடங்கிய குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.
The post விதிகளின்படி விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டும்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.