×

பாஜ்ரா பூரி

தேவையான பொருட்கள்

கம்பு மாவு – 3 கப்
வெள்ளை எள் – 3 டீஸ்பூன்
சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
மாங்காய்த் தூள் – 2 டீஸ்பூன்
வெந்தயக்கீரை – 2 கட்டு
பொடித்த சர்க்கரை – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
இஞ்சி – புண்டு விழுது – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு.
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்.

செய்முறை

முதலில் வெந்தயக்கீரையை சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, வெள்ளை எள், சீரகத்தூள், மாங்காய்த்தூள், வெந்தயக்கீரை, பொடித்த சர்க்கரை, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தனியா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து வைக்க வேண்டும். பின்னர் மசாலா கலந்த மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து புரி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதன் மேல் எண்ணெய் 1 டீஸ்பூன் தடவி மூடி 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.பின்பு பூரி மாவை சிறு உருண்டைகளாக்கி, பூரி போன்று தேய்த்து தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாகப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பாஜ்ரா பூரி தயார்!

 

The post பாஜ்ரா பூரி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...