×

கம்புப் பணியாரம்

தேவையானவை

கம்பு, புழுங்கல் அரிசி – தலா 1 கப்
பாசிப்பருப்பு – 1/2 கப்
காய்ந்தமிளகாய் – 4
பொடியாக நறுக்கிய இஞ்சி – 1டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 1/2 கப்
கடுகு, உளுந்து – தலா 1/2 டீஸ்பூன்
உப்பு, நல்லெண்ணெய் – தேவைக் கேற்ப.

செய்முறை

நன்கு சுத்தம் செய்த அரிசி, கம்பு, பாசிப்பருப்பை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து, அதனுடன் தேங்காய்த்துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். சிறிது உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து 4 மணி நேரம் புளிக்க விடவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, இஞ்சி சேர்த்து வதக்கி மாவுக்கலவையில் கொட்டி நன்கு கலந்து சூடான பணியாரச் சட்டியில் நல்லெண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

The post கம்புப் பணியாரம் appeared first on Dinakaran.

Tags : Rye Paniyaram ,
× RELATED இளநீர் நன்னாரி ஜூஸ்