×

நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக ஆஜரக சம்மன் அனுப்பபட்ட நிலையில், பல்வேறு விளக்கங்கள் கேட்டு காவல்துறைக்கு சீமான் கடிதம்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பில் இருந்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளிக்கபட்ட இரண்டு கடிதங்கள் வெளிவந்துள்ளது. இந்த கடிதத்தில் வழக்கு ஆவணங்களை தனக்கு அளித்தால் மட்டுமே போலீஸ் விசாரணைக்கி தன்னால் ஒத்துள்ளைப்பு வழங்க இயலும் என்றும், ஆவணங்கள் தரப்படாமல், நான் விசாரணைக்கு ஆஜ்ராவது எந்த பயணும் அளிக்காது எனவும், சீமான் தனது கடிதம் மூலமாக போலீசாருக்கு விளக்கம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக முதல் கடித்ததில் இந்த வழக்கு விசாரணைக்காக நான் தங்கள் முன் ஆஜராகவேண்டும் என்று அறிவுறுத்தபட்ட அழைப்பாணையை நான் பெற்றேன் எனவும், பல்வேறு மாவட்டங்களில் ஒப்புகொள்ளபட்ட நிகழ்ச்சிகள் மற்றும் வேறு அரசியல் வழக்கில் நீதிமன்றத்தின் முன் ஆஜராக வேண்டிய சூழ்நிலை உள்ளதாலும், தன்னால் தற்போது ஆஜராக இயலவில்லை எனவும், அதனால் தனக்கு பதிலாக தனது வழக்கறிஞர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது கடிதத்தில், வழக்கு சம்பந்தமாக முதல் தகவல் அறிக்கை, புகார் தாரரின் விசாரணை வாக்கு மூலம், இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த நீதிமன்ற உத்தரவு ஏதேனும் இருப்பின் அதன் நகல், புகார் தாரர் அல்லது வேறு சாட்சியங்கள் நீதிமன்றத்தில் அளித்த வாக்கு மூலம் மற்றும் வழக்கின் இதர ஆவணங்களின் நகல்கள் எனக்கு வழங்கபட்டால் தான் இந்த வழக்கில் என்னால் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க ஏதுவாக இருக்கும் எனவும், மேற்கண்ட ஆவணங்கள் ஏதும் இல்லாமல் நான் விசாரணைக்கு ஆஜராவது எந்த பயணையும் அளிக்காது எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒறுங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்துள்ளார்.

The post நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக ஆஜரக சம்மன் அனுப்பபட்ட நிலையில், பல்வேறு விளக்கங்கள் கேட்டு காவல்துறைக்கு சீமான் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Vijayalakshmi ,Seeman ,CHENNAI ,Valasaravakkam police station ,Naam Tamilar Party ,
× RELATED ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பூர்வகுடி...