×

தஞ்சையில் அரசு மருத்துவமனையின் சத்து டானிக் மருந்துகள் குப்பையில் கொட்டப்பட்ட அவலம்..!!

தஞ்சை: தஞ்சையில் அரசு மருத்துவமனையின் சத்து டானிக் மருந்துகள் குப்பையில் கொட்டப்பட்ட அவலம் நடந்துள்ளது. ஒன்றிய அரசு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக இந்திய நாட்டை மாற்ற வேண்டும் என்பதற்காக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பெண்களுக்கு வழங்குவதற்காக புளோரிக் ஆசிட் சிரப் வழங்கப்பட்டு வருகிறது.

இது அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த சூழலில் தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு சத்து டானிக்கை வழங்காததால் மருந்துகள் கடந்த மாதம் காலாவதி ஆகியுள்ளன.

இதன் காரணமாக நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள குப்பைத்தொட்டியில் 200 சத்து டானிக் பாட்டில்கள் கொட்டப்பட்டுள்ளன. கர்ப்பிணிகளுக்கு வழங்காமல் சத்து டானிக் மருந்துகளை வீணாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசு மருத்துவமனைக்கு சொந்தமான இவ்வளவு டானிக் பாட்டில்கள் வெளியே எப்படி வந்தது? தனிநபர் எவ்வாறு குப்பையில் வீசினார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

The post தஞ்சையில் அரசு மருத்துவமனையின் சத்து டானிக் மருந்துகள் குப்பையில் கொட்டப்பட்ட அவலம்..!! appeared first on Dinakaran.

Tags : Thanjavur Government Hospital ,Thanjavur ,Union Government ,Health Department ,Tanjore government hospital ,
× RELATED தஞ்சை கீழவாசல் அருகே வீட்டில் வாஷிங்...