
சென்னை: நடிகர் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் படங்களை தயாரிக்க கடன் வாங்கியுள்ளார். இதன் மூலம் அவர் பெற்ற ரூ. 21.29 லட்சம் கோடி கடனை லைகா புரொடக்சன் நிறுவனம் ஏற்று செலுத்தியது. இந்தக் கடனை நடிகர் விஷால் செலுத்தவில்லை என லைகா வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் 2021 ஜனவரி 1 முதல் 2023 செப்டம்பர் வரையிலான நடிகர் விஷாலின் 4 வங்கி கணக்கு விவரங்கள், நடிகர் விஷால் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மார்க் ஆண்டனி படத்தை வெளியிட ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதி உத்தரவு நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர் விஷால் நேரில் ஆஜராகினார்.
நீதிமன்றத்தில் கூறியதற்கு முரணாக வங்கி கணக்கில் விவரம் எதுவும் இருந்தால் எதிர்காலத்தில் படம் எதுவும் நடிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் விஷால் தொடர்பான அனைத்து படங்களையும் எதிர்காலத்தில் தடை விதிக்கலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். நீதிமன்றத்தில் கூறியதற்கு முரணாக வங்கி கணக்கில் விவரம் எதுவும் இருந்தால் எதிர்காலத்தில் படம் ஏதும் நடிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். பணத்தை திரும்ப செலுத்த விஷால் என்ன திட்டம் வைத்திருக்கிறார் ? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உங்களது சொத்து விவரங்களை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தாக்கல் செய்து விட்டீர்களா?. மேலும், கடன் பெற்றபோது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட விஷால் அதனை படிக்கவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து படத்தில் நடிப்பீர்கள்; அதன் மூலம் பணம் பெறுவீர்கள்; ஆனால் கடனை திரும்ப செலுத்த மாட்டீர்களா? என விஷாலிடம் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இதை தொடர்ந்து வழக்கு விசாரணை செப்.19க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
The post நடிகர் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம்! appeared first on Dinakaran.