×

67வது பிறந்தநாள் கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு நேற்று 67வது பிறந்தநாள். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கனிமொழி எம்பி, நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், ‘இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்பு நண்பர் ‘கலைஞானி’ கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நலமுடன் நற்பணிகளைத் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவர்: இதற்கு தனது டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள கமல்ஹாசன், ‘இனிய நண்பரும், முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான மு.க.ஸ்டாலின், தங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என் பிறந்தநாளுக்கு மேலும் வர்ணம் சேர்க்கிறது. அன்பும் நன்றியும்’ என்று பதிவிட்டுள்ளார்….

The post 67வது பிறந்தநாள் கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Kamalhasan ,CM G.K. ,Stalin ,Chennai ,People's Justice Maiam Party ,Chief of ,Tamil ,Nadu ,G.K. Stalin ,CM BC ,
× RELATED பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைக் குறு,...