×

மணிப்பூர் காங்போஃபி மாவட்டத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் குக்கி இனத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூர்: மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் நடந்த வன்முறையில் குக்கி-ஜோ சமூகத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மணிப்பூர் காங்போஃபி மாவட்டத்தில் குக்கி இனத்தைச் சேர்ந்த 3பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மைத்தேயி, குக்கி இன மக்கள் இடையே 2 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. காலை 8 மணியளவில் இரங் பகுதியில் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உயிரிழப்பு என தகவல் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் குகி-ஜோ சமூகத்தைச் சேர்ந்த மூன்று பழங்குடியின மக்கள் தடைசெய்யப்பட்ட தீவிரவாதக் குழுக்களின் உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இம்பால் மேற்கு மற்றும் காங்போக்பி மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள இரெங் மற்றும் கரம் பகுதிகளுக்கு இடையே உள்ள கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் வாகனத்தில் வந்து தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமம் பழங்குடியின மக்களின் ஆதிக்கம் கொண்டது.

மே 3 முதல், மணிப்பூரில் பெரும்பான்மையான மெய்டேய் மற்றும் பழங்குடி குக்கி சமூகங்களுக்கு இடையே தொடர்ச்சியான மோதல்கள் நடந்து வருகின்றன, இதுவரை 160 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது எங்களிடம் அதிக தகவல்கள் இல்லை என்று அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரெங் மற்றும் கரம் வைஃபேய் இடையேயான பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் காலை 8.20 மணியளவில் நிகழ்ந்துள்ளது. முன்னதாக செப்டம்பர் 8 ஆம் தேதி, மணிப்பூரில் உள்ள தெங்னௌபால் மாவட்டத்தில் உள்ள பல்லேல் பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

The post மணிப்பூர் காங்போஃபி மாவட்டத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் குக்கி இனத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Manipur's Kangbofi district ,Manipur ,Kuki-Jo ,Manipur's Kangbokbi district ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...