×

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ்

தெலங்கானா, ஹைதராபாத்தில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பராத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் 45 மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Management Trainee
i) Electronics: 15 இடங்கள் (பொது-5, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்- 2, எஸ்சி-2, எஸ்டி-2).
ii) Mechanical: 12 இடங்கள் (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-2)
iii) Electrical: 4 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்சி-1).
iv) Computer Science: 1 இடம் (பொது).
v) Cyber Security: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
vi) Chemical: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
vii) Civil: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1)
viii) Business Development: 1 இடம்
ix) Optics: 1 இடம் (பொது)
x) Finance: 2 இடங்கள். (பொது-1, ஒபிசி-1).

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது, சம்பளம், தகுதி:
வயது: 27க்குள் இருக்க வேண்டும். நிதி பிரிவுக்கு 28க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.40,000-1,40,000.
தகுதி: பொறியியல் பிரிவுக்கு Electronics/Mechanical/Electrical/Computer Science/Civil/Electronics & Instrumentation/Industrial Electronics/Electronics & Communication ஆகிய பாடங்களில் பி.இ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர பிரிவுக்கு Chemical/Physics/Applied Physics/Optics/Applied Optics/Fiber Optics ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ICAI தேர்ச்சி/முதல் வகுப்பில் எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Welfare Officer: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). வயது: 28க்குள். சம்பளம்: ரூ.30,000-1,20,000.
தகுதி: Arts/Science/Commerce/Law பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Personnel Management/Human Resource Management/Industrial Relations பிரிவில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி.
3. JM (Public Relations): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.30,000-1,20,000. வயது: 28க்குள். தகுதி: Public Relations/Communication/Mass Communication/Journalism/ MBA ஆகிய பிரிவுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி அல்லது முதுநிலை டிப்ளமோ.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.www.bdl-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.9.2023.

The post ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ் appeared first on Dinakaran.

Tags : Union Govt PSUs ,Bharat Dynamics ,Union government ,Hyderabad, Telangana.… ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...