×

இசை நிகழ்ச்சி குளறுபடிகள்: சக இசையமைப்பாளர் என்ற முறையில் ஏ.ஆர்.ரகுமான் பக்கம் நிற்கிறேன்.. யுவன் சங்கர் ராஜா ஆதரவு..!!

சென்னை: சென்னை பனையூரில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் கடும் குளறுபடி ஏற்பட்ட நிலையில், சக இசையமைப்பாளர் என்ற முறையில் தாம் ரகுமானின் பக்கம் நிற்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். எக்ஸ் வலைத்தளத்தில் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகப்பெரிய மக்கள் திரளை அழைத்து இசைக்கச்சேரி நடத்துவது என்பது சிக்கல் மிகுந்த சவால் என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற நிகழ்ச்சிகளின் நோக்கம் சிறப்பானது என்றாலும் கூட, ஏற்பாடுகள் சில நேரங்களில் சிக்கலாக அமைந்துவிடுவதால் நமது இசையை அர்த்தமுள்ளதாக்கும் ரசிகர்கள், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், ஏற்பாட்டாளர்கள் இதுகுறித்து பதில் அளிப்பது மிகவும் அவசியமானது என்று கூறியுள்ள யுவன் சங்கர் ராஜா, இதுபோன்ற சூழல் பெரிதாவதைப் பார்ப்பது மனதை மிகவும் உடையச் செய்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ரசிகர்களுக்கு பல்வேறு நியாயமான காரணங்களுக்காக அந்த இரவு மறக்க முடியாத இரவாக மாறியுள்ளதாகவும், சக இசையமைப்பாளர் என்ற முறையில் தாம் ஏ.ஆர்.ரகுமான் பக்கம் நிற்பதாகவும் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இனி எதிர்காலத்தில் அமைக்கும் நிகழ்ச்சிகளில் உச்சபட்ச கவனத்தையும், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உள்ளிட்ட ரசிகர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சவுகரியத்தை உறுதி செய்ய கற்றிருப்பார்கள் என்று நம்புவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

The post இசை நிகழ்ச்சி குளறுபடிகள்: சக இசையமைப்பாளர் என்ற முறையில் ஏ.ஆர்.ரகுமான் பக்கம் நிற்கிறேன்.. யுவன் சங்கர் ராஜா ஆதரவு..!! appeared first on Dinakaran.

Tags : AR ,Raghuman ,Yuvan Shankar Raja ,CHENNAI ,Panaiyur, Chennai ,AR Raghuman ,
× RELATED துருக்கியில் தளபதி 68 படப்பிடிப்பு