- செட்டுவெட்டு கண்ணனூர் ஏரி
- செட்டிபுட்டு
- தீழாகம்
- நகரம்
- முருகன்
- செட்டிபுட்டு கண்ணூர் ஏரி
- பனை விதை நடவு
- செட்டு கண்ணனூர்
சேத்துப்பட்டு : சேத்துப்பட்டு கண்ணனூர் ஏரிக்கரையில் பனை விதை நடும் நிகழ்ச்சியை திமுக நகர செயலாளர் முருகன் தொடங்கி வைத்தார்.சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சியில், கண்ணனூர் ஏரிக்கரை பொதுப்பணி துறை மூலம் கரை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து கண்ணனூர் கிராம மக்கள் ஏரி கரையில் ஆயிரம் பனை விதைகளை நட திட்டமிட்டனர்.
இந்நிலையில், சேத்துப்பட்டு திமுக நகர செயலாளர் முருகன் தலைமையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் முருகன் ஏரிக்கரை மற்றும் நீர் நிலைகள் அருகே பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் கதிரவன், முருகன் மற்றும் கண்ணனூர் கிராம இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.
The post சேத்துப்பட்டு கண்ணனூர் ஏரிக்கரையில் பனை விதை நடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.