×

“மோடி அரசே வெளியேறு”: ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்..!!

சென்னை: “மோடி அரசே வெளியேறு” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டம் நடத்தி வருகிறது. ஒன்றிய அரசை கண்டித்து சென்னை பாரிமுனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்ததற்கு ஒன்றிய அரசே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் சிறு, குறு தொழில்கள் அழிந்து வருவதாகவும், கார்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஒன்றிய அரசை கண்டித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடைபெற்றது. திருச்சி, கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடத்திய இந்திய கம்யூ. கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சேலம் கோட்டை பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி முன்பு மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். “மோடி அரசே வெளியேறு” என வலியுறுத்தி செப்டம்பர் 14ம் தேதி வரை தொடர் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post “மோடி அரசே வெளியேறு”: ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Communist Party of India ,Tamil Nadu ,Union Govt ,CHENNAI ,Modi Govt ,Union Government ,
× RELATED கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்திய...