×

மாவட்டம் முழுவதும் நடவு செய்ய 30 ஆயிரம் விதை பந்துகளை தாயார் செய்த அரசு பள்ளி மாணவர்கள்

*கலெக்டரிடம் வழங்க உள்ளனர்

கலவை : கலவை அருகே மேல் புதுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாவட்டம் முழுவதும் நடவு செய்வதற்காக 30 ஆயிரம் விதை பந்துகள் தயார் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை அடுத்த மேல் புதுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி கடந்த 8ம் தேதி தொடங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை கல்பனா தலைமையில், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் முன்னிலையில், மாணவர்கள் இலுப்பை, வேம்பு, பூவரசு, நாவல், மலைவேம்பு உள்ளிட்ட 30 ஆயிரம் விதை பந்துகளை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று பணிகள் முழுவதும் நிறைவு பெற்றது. இதனை பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் விதைப்பந்துகள் நடவு செய்ய கலெக்டர் வளர்மதியிடம் வழங்க உள்ள
னர். அப்போது, ஆசிரியர் சந்திரன், வாழைப்பந்தல் நம்மாழ்வார் இயக்க குழு ஒருங்கிணைப்பாளர் நடராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post மாவட்டம் முழுவதும் நடவு செய்ய 30 ஆயிரம் விதை பந்துகளை தாயார் செய்த அரசு பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Upper Puduppakkam ,Panchayat Union Middle School ,Makkat ,
× RELATED ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின்...