×

கோயில் பணிகள் குறித்து கேள்வி கேட்க தெலுங்கானா ஆளுநர் தமிழசைக்கு உரிமை இல்லை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரை எடுபடவில்லை என்பதால் போராட்டங்கள் நடத்துகிறார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 45 ஆண்டுகளாக அச்சுறுத்தலை சந்திக்கிறேன். இது போன்ற போராட்டங்கள் என் பணியை தடுத்துவிடாது. அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ மிரட்டல்களை நான் சந்தித்து இருக்கிறேன். சனாதனம் குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம்; ஆர்ப்பாட்டம், போராட்டம் இவற்றின் மூலம் எங்களை அச்சுறுத்த முடியாது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள், கோயில் பணிகள் குறித்து கேள்வி கேட்க தமிழசைக்கு உரிமை இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்படும் இந்துசமய அறநிலையத்துறை ஒரு மாறுபட்ட மறுமலர்ச்சியை துரையின் சார்பில் ஆட்சி பொறுப்பேற்ற இந்த 28 மாதங்களில் பல்வேறு சாதனைகளை திமுக அரசு நிகழ்த்தி வருகிறது. அதில் ஒரு அங்கமாக நேற்றைய முன்தினம் 1030 திருக்கோயில்களில் நல்லிக்காட்டுவிழா நடந்து முடிந்துள்ளது.

அதில் மக்கள் சாதனையக 2022-23ம், 2023-24ம் ஆகிய 2 ஆண்டுகளில் 930 கட்டணமில்லா திருமணங்களை திருமண்டபம் எடுத்து திருமணத்தை எடுத்து நடத்த வசதியில்லாத இறையன்புகளுக்கு இதுவரை 930 நடந்துள்ளது.

நம்முடைய முன்னோர்கள் விட்டுச்சென்ற பொக்கிஷமான ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களில் பூணரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக 2022-23ம் ஆண்டு 100 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கியுள்ளது. அதில் 143 திருக்கோயில்கள் பூணரமைப்பு பணிகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 40 கோடி ரூபாய் உபயதார்கள் நிதியோடு 140 கோடி ரூபாய் செலவில் குடமுழக்குக்கான திருபணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதே போல 2023-24ம் ஆண்டு தமிழக முதல்வர் அவர்கள் மேலும் 1 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்குவதாக அறிவித்து 87 திருக்கோயில்களில் 100 கோடி திருக்கோயில் நிதி, அரசு நிதி, 60 கோடி ரூபாய் உபாயத்தாரர் நிதி என்று 87 திருக்கோயில்கள் 160 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 111 பேர் அர்ச்சகர் பயிச்சி பள்ளியில் பயிற்சி பெறுவதற்கு மனு அளித்துள்ளார்கள் வெகு விரைவில் பயிற்சி பள்ளி தொடங்கும் மொத்தமாக 20 பயிச்சி பள்ளிகள் உள்ளது. அதில் 2 பயிச்சி இந்த ஆட்சி வந்த பிறகு தொடங்கப்பட்டது. ஏற்கனவே உள்ள 6 பயிற்சி பள்ளிகள் மூடுவிழா கண்டதை அடுத்து அதை மேம்படுத்தி அந்த பயிற்சி பள்ளிகளையும் தற்போது பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலம் கோயில்களில் இறைப்பணி செய்யும் அரச்சகர்களுக்கு எந்தவித பிரச்னை வந்தாலும் துறை ரீதியிலான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”

 

The post கோயில் பணிகள் குறித்து கேள்வி கேட்க தெலுங்கானா ஆளுநர் தமிழசைக்கு உரிமை இல்லை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Telangana ,Governor ,Tamil Nadu ,Minister ,Shekharbabu ,CHENNAI ,Annamalai ,
× RELATED பள்ளியில் பெண்ணுடன் ஜாலி ஆசிரியரை இழுத்து வந்து மரத்தில் கட்டி அடி, உதை