×

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை

சென்னை:நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் முன் சீமான் ஆஜராகவில்லை. வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கமளிக்கின்றனர். நடிகை விஜயலக்ஷ்மி கொடுத்த புகாரின் பேரில் சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் இன்று ஆஜராகவில்லை. நடிகை விஜயலக்ஷ்மி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி ஆகஸ்ட் 28ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும் ரூ.95 லட்சம் பணம் மற்றும் நகைகளை அபகரித்துவிட்டதாகவும் விஜயலக்ஷ்மி தெரிவித்து இருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விஜயலக்ஷ்மி திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் கடந்த 1ம் தேதி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். சீமான் தன்னை 7 முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைத்ததாக விஜயலக்ஷ்மி புகார் அளித்து இருந்த நிலையில், அதன் உண்மை தன்மையை அறிய கடந்த 7ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஜயலக்ஷ்மிக்கு 2 மணி நேரம் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்த நிலையில், சீமான் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனிடையே நடிகை விஜயலக்ஷ்மி புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு போலீஸ் சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி வளசரவாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் சீமான் இன்று ஆஜராகவில்லை.

The post வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை appeared first on Dinakaran.

Tags : seeman ,gouravavakam police station ,Chennai ,Chennai Grosavaravakam Police ,Vijayalakshmi ,Seaman ,Growth Guardian ,Growth Police Station ,
× RELATED ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பூர்வகுடி...