
சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றதால் அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அண்ணாமலை போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி திடீரென சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து காவல்துறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பொன். ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்தார். இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாக கூடுதல், முறையற்ற தடுத்தல், பொதுமக்களுக்கு தொல்லை தருதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நுங்கப்பாக்கம் போலீசார் அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post பொதுமக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.