×

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய புதுக்கோட்டை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் அமலாக்கத்துறை சோதனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் ராமச்சந்திரன் இவர் பல ஆண்டு காலமாக அரசின் மணல் குவாரி ஒப்பந்தம் அதேபோல ரியல் எஸ்டேட், உள்ளிட்ட தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டபோது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அப்போது வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மீண்டும் 8 ஆண்டுகள் பிறகு அமலாக்கத்துறையினர் இன்று காலை 9.30 மணி முதல் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை நிஜாம் காலனி உள்ள அலுவலகத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இரண்டு வாகனத்தில் 4 அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்திருக்கின்றனர். ஒரு வாகனத்தில் கேரளா பதிவு எண் கொண்ட வாகனம் வந்துள்ளது. மமற்றொரு வாகனம் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனம், அதேபோல மத்திய பாதுகாப்பு படை போலீசார் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அரைமணி நேரமாக சோதனை மேற்கொண்டுள்ளனர், தொழில் அதிபர் இராமச்சந்திரன் பொறுத்தவரையில் கடந்த ஆட்சியில் அரசு மணல் அப்பந்தங்கள் செய்து வருகின்றார். அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு குவாரி ஒப்பந்தம் ஆகிய தொழில் நடத்தி வருகின்றர்.

புதுக்கோட்டையில் தொழிலதிபரும், மணல் குவாரி நடத்தி வருபவருமான ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தி வரும் நிலையில் புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஹனிபா நகரில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் அவர்களின் மைத்துனர் கோவிந்தன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வரும் நிலையில், மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய புதுக்கோட்டை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Pudukkotta ,Dintugul ,Minister ,Senthil Balaji ,Labour ,President ,Ramachandran ,Muthupattinam Village, Pudukkotta District ,Tintugul ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க புதிய அமைப்பு