×

செப் 19 முதல் 29ம் தேதி வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சோதனை

காரைக்கால், செப்.12: வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வி.வி.பேட்- இயந்திரங்கள் ஆகியவற்றை வரும் 19ம் தேதி முதல் 29ம் தேதி வரை காரைக்கால் மாவட்டத்தில் முதல் கட்ட சோதனை நடைபெறுகிறது. இதையொட்டி அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் விளக்கக் கூட்டம் நேற்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், காரைக்கால் மாவட்ட கலெக்டருமான குலோத்துங்கன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் முதல் கட்ட சோதனை எப்படி நடைபெறும் என்பதை அரசியல் கட்சி தலைவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

பின்னர் பேசிய கலெக்டர் குலோத்துங்கன், வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவிபேட் இயந்திரங்கள் ஆகியவற்றை வரும் 19ம் தேதி முதல் 29ம் தேதி வரை காரைக்கால் மாவட்டத்தில் முதல் கட்ட சோதனை நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு கட்சியிலும் 2 பேர் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் செல்போன் கேமரா உள்ளிட்டவைகளுக்கு உள்ளே அனுமதி இல்லை. காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை தினமும் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்தார். மேலும், கூட்டத்தில் வாக்காளர் பதிவு அதிகாரிகளான ஜான்சன், சச்சிதானந்தம் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

The post செப் 19 முதல் 29ம் தேதி வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சோதனை appeared first on Dinakaran.

Tags : Karaikal ,
× RELATED 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை...