- நாகப்பட்டினம்
- தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு
- நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம்
- கலெக்டர்கள்
- தின மலர்
நாகப்பட்டினம், செப்.12: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொறுப்பாளர் ரவி தலைமை வகித்தார். தொடக்க நிலை ஆசிரியர் சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் பாலசண்முகம் அமிர்தலிங்கம், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எண்ணும் எழுத்தும் திட்டத்தினை கைவிட வேண்டும். விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும். வட்டார வள மையங்களுக்கும், பயிற்சி வகுப்புகளுக்கும் ஆசிரியர்களை கருத்தாளராக பயன்படுத்தக் கூடாது. 3 மாதங்களுக்கு ஒரு முறை பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
The post கலெக்டர் அலுவலகம் முன் தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.