×

குழாய்களில் அடிக்கடி உடைப்பு: உன்னை அறிந்தால் உலகம் உனதே!

கீழ்வேளூர்,செப் 12: நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி புல முதல்வர் .இளங்கோவன் தலைமை வகித்தார். அறிவியல் மற்றும் மனித வளத்துறை தலைவர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜேஸ்வரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் விஜய்மித்ரா பங்கேற்றார். அவர் உன்னை அறிந்தால் உலகம் உனதே! மாணவர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் தனித் திறமைகளை கண்டறிந்து தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். பள்ளி வாழ்க்கையிலிருந்து அடுத்தக்கட்டமாக கல்லூரி வாழ்க்கைக்குள் வந்துள்ள மாணவர்கள் எப்படி திறன்களை வளர்த்துக் கொண்டு வேலை வாய்ப்பை தேடி கொள்வது, பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர் கூட்டாக இணைந்து நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவது குறித்து விளக்கினார். இதில் ஆங்கிலத்துறை பேராசிரியர் கல்யாணசுந்தரி மற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், முதலாண்டு மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post குழாய்களில் அடிக்கடி உடைப்பு: உன்னை அறிந்தால் உலகம் உனதே! appeared first on Dinakaran.

Tags : Kilivelur ,Nagapattinam ,Tirukuwela ,Anna University College ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்...