கிருஷ்ணகிரி, செப்.12: கிருஷ்ணகிரியில், நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 276 மனுக்கள் குவிந்தன. கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் வழங்கிய வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 276 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சரயு, தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, ₹17 ஆயிரம் மதிப்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ஈமச்சடங்கு நிதியுதவியும், தலா ₹14 ஆயிரம் வீதம் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹28 ஆயிரம் மதிப்பிலான திறன் பேசிகள் என மொத்தம் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில், டிஆர்ஓ சாதனைக்குறள், தனித்துணை கலெக்டர் பன்னீர்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் பத்மலதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சுந்தர்ராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.பூவதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post மக்கள் குறைதீர் முகாமில் 276 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.