
- 17வது சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டி
- திருப்பூர்
- தேசிய விளையாட்டுகள்-2023
- கோவா
- சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டி
- தின மலர்
திருப்பூர், செப்.12: கோவாவில் அடுத்த மாதம் 25ம் தேதி முதல் நவ.9ம் தேதி வரை தேசிய விளையாட்டு-2023 நடக்கிறது. இதில், மாநில அளவில் ஆண் மற்றும் பெண்கள் கைப்பந்து அணி தேர்வு செய்யப்பட்டு, போட்டியில் பங்கேற்க அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இந்த அணிக்கு சிறந்த வீரர்களை தேர்வு செய்யும் வகையில், மண்டல மற்றும் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த வேண்டும் என, அந்தந்த மாவட்ட கைப்பந்து கழகத்தினருக்கு, தமிழ்நாடு கைப்பந்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்ட கைப்பந்து கழகத்தின் சார்பில், வரும் 17ம் தேதி திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டி நடத்தப்பட இருக்கிறது. பதிவு செய்த அனைத்து அணிகளும் கலந்து கொள்ள வேண்டும் என திருப்பூர் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
The post திருப்பூரில் 17ல் சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டி appeared first on Dinakaran.