×

தியாகி இமானுவேல் சேகரன் 66வது நினைவு தினம் அனுசரிப்பு

 

ஊட்டி,செப்.12: சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் 66வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. குன்னூர் பஸ் நிலையம் அருகே தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் இமானுவேல் சேகரனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோவி ராமசாமி, மாவட்ட பொருளாளர் சுரேஷ் மற்றும் சமூக தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம், பரமகுடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.3 கோடி செலவில் இமானுவேல் சேகரன் நினைவு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

The post தியாகி இமானுவேல் சேகரன் 66வது நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Martyr Immanuel Sekaran ,Ooty ,Emmanuel Sekaran ,Coonoor ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் நடவு பணிகளுக்காக ஊட்டி...