×

மாவட்ட செஸ் போட்டி மேலூர் அரசு பள்ளி மாணவிகள் வெற்றி

 

மேலூர், செப். 12: மதுரை மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள், மதுரை உலகேனேரில் உள்ள டிக்காத்லான் ஸ்போர்ட்ஸ் சென்டரில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 200 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முதல் 10 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 9 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் மேலூர் அருகேயுள்ள அ.செட்டியார்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவி இஸ்பா டுஜானா 2ம் இடமும், இதே பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவி யாகஸ்ரீ 3ம் இடமும் பெற்றனர்.  செஸ் போட்டியில் வெற்றி பெற்று திரும்பிய மாணவிகளை அ.செட்டியார்பட்டி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை, செஸ் பயிற்சி அளித்த இடைநிலை ஆசிரியர் செந்தில்குமார், அ.வல்லாளபட்டி சேர்மன் குமரன் மற்றும் ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள், கிராமமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.

The post மாவட்ட செஸ் போட்டி மேலூர் அரசு பள்ளி மாணவிகள் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Melur Govt School Girls Win District Chess Competition ,Madurai District Chess Competitions ,Decathlon Sports Centre ,Ulaganere, Madurai ,Dinakaran ,
× RELATED சிறுபாசன ஏரிகளுக்கு நீர் செல்ல...