×

ஈரோடு அருள் சித்தா கிளினிக்கில் மூட்டு வலிக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

 

ஈரோடு, செப்.12: ஈரோடு, கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள அருள் சித்தா கிளினிக்கில் மூட்டு வலிக்கான மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. கவிஞர் வே.து.வெற்றிச்செல்வன், கவிஞர் வே.து.யோகேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். அருள் சித்தா கிளினிக் நிறுவனர் முனைவர் அருள் நாகலிங்கம் முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் எஸ்.சிவானந்தம் பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினார். மூட்டுவலி சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்பட்டன. முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். காலை, மதியம் இரண்டு வேளையும் வந்த அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

The post ஈரோடு அருள் சித்தா கிளினிக்கில் மூட்டு வலிக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் appeared first on Dinakaran.

Tags : Arul Siddha Clinic ,Erode ,Karur Bypass Road ,Medical Consultation Camp ,Erode Arul Siddha Clinic ,Dinakaran ,
× RELATED தோல் கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி எச்சரிக்கை