×

சிதம்பரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

சிதம்பரம், செப். 12: சிதம்பரம் அருகே உள்ள அம்மாபேட்டை முத்துக்குமரன் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் மோகன்முத்து(63). இவர் கடந்த 8ஆம் தேதி இரவு அம்மாபேட்டை பைபாஸ் அருகே மது போதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த மர்ம நபர் மோகன்முத்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் போன் மற்றும் 5 பவுன் செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடிப்பதற்கு குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு, கோபி மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா கருவிகள் மூலம் விசாரணை செய்து வந்தனர். அதில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் சிதம்பரம் அருகே உள்ள வீரசோழன் துனிசிரமேடு, இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் வீரஜோதி(27) என்பது தெரிய வந்தது. அதனை அடுத்து வீரஜோதியை போலீசார் கைது செய்து ஆப்பிள் போன் மற்றும் ஐந்து பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

The post சிதம்பரம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Marimuthu ,Mohanmuthu ,Ammapettai Muthukumaran ,
× RELATED குழந்தை திருமணம்: சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்கு!