×

இந்தியா கூட்டணியை பார்த்து ஒன்றிய அரசு பயப்படுகிறது மேயர் மகேஷ் பேச்சு

குளச்சல், செப். 12: குளச்சல் நகர தி.மு.க.வாக்குச்சாவடி பாகமுகவர் குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை குளச்சலில் நடந்தது. நகர செயலாளர் நாகூர் கான் தலைமை வகித்தார். குளச்சல் நகர் மன்ற தலைவர் நசீர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்துகொண்டு பேசியதாவது, குளச்சல் நகர பகுதியில் உள்ள 25 வார்டுகளில் முதலில் பாக முகவர் ஆய்வை தொடங்கி இருக்கிறோம்.

ஆய்வு கூட்டத்திற்கு வராதவர்களை மாற்றி கழகத்திற்கு பாடுபடுபவர்களை போட வேண்டும்.
இந்தியா கூட்டணியை பார்த்து ஒன்றிய அரசு பயப்படுகிறது. எதையும் செய்ய பா.ஜ.அரசு தயாராக உள்ளது. இந்தியா கூட்டணி வலு சேர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து நாட்டின் பெயரை மாற்ற துடிக்கிறார்கள். இந்தியாவை எல்லா விதத்திலேயும் வளர்ச்சியில் மாற்றி காட்டுவேன் என கூறிய பிரதமர் பெயரை மாற்றிவிட்டார்.

39 எம்பிகளைக் கொண்டு இந்தியாவில் மூன்றாவது கட்சியாக தி.மு.க உள்ளது. அந்தக் கட்சிக்கு கவர்னர் பல இன்னல்களை தந்து கொண்டு இருக்கிறார். நீங்கள் புரிந்துகொண்டு திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு அயராது பாடுபடவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் குளச்சல் நகர் மன்ற துணைத் தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், கவுன்சிலர்கள், மாவட்ட மீனவரணி தலைவர் ஆன்றனிராஜ்(எஸ்.கே.) ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணைத் தலைவர் சரவணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post இந்தியா கூட்டணியை பார்த்து ஒன்றிய அரசு பயப்படுகிறது மேயர் மகேஷ் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union Government ,India alliance ,Mayor ,Mahesh ,Kulachal ,DMK Constituency Committee ,Dinakaran ,
× RELATED கொலிஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை...