
திருவாரூர், செப். 12: ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் இன்று 7 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, வேலையின்மை, மதவாத அரசியல், இந்தி திணிப்பு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு, மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (செப்.12) முதல் வரும் 14ம் தேதி வரை 3 நாள்களுக்கு தொடர் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தலைமை தபால் நிலையம், கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வலங்கைமான் ஆகிய ஊர்களின் தலைமை தபால் நிலையங்கள், நீடாமங்கலத்தில் தேசிய வங்கி கிளை
முன்பு என மொத்தம் 7 இடங்களில் இந்த மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்திற்கு பொதுமக்கள் உட்பட அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post ஒன்றிய அரசை கண்டித்து இன்று 7 இடங்களில் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.