
கும்பகோணம், செப்.12: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் சீர் வரிசையுடன் கூடிய இலவச திருமண விழாவை நடத்தி வைத்தார். அதனைத்தொடர்ந்து கும்பகோணம் தொகுதி, திருநாகேஸ்வரம் பேரூராட்சி, ஒப்பிலியப்பன் கோயிலில் வேங்கடாஜலபதி சுவாமி கோயில் சார்பாக சீர் வரிசையுடன் கூடிய இலவச திருமணங்களை ஐந்து ஜோடி மணமக்களுக்கு கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் நடத்தி வைத்தார்.
விழாவில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கணேசன், திருநாகேஸ்வரம் பேரூராட்சி தலைவர் ஜோதி தாமரைச்செல்வன், திருநாகேஸ்வரம் பேரூர் திமுக செயலாளர் தாமரைச்செல்வன், அறங்காவலர் குழு தலைவரும், ஸ்கைவின் குழும தலைவருமான மோகன், உறுப்பினர்கள் வெங்கடேசன், ராஜேந்திரன், இளங்கோவன், மகேஸ்வரி துரைராஜ் மற்றும் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம் appeared first on Dinakaran.