×

முத்துமாரியம்மன் கோயிலில் 3 ஜோடிகளுக்கு திருமணம் அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி மக்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும்

புதுக்கோட்டை, செப்.12: புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 3 ஜோடிகளுக்கான திருமணங்களை, கலெக்டர் மெர்சி ரம்யா, நேற்று தலைமையேற்று நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் கலெக்டர் மெர்சி ரம்யா பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை மக்களின் பொருளாதாரம் உயரும் வகையில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதனடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறையில் சார்பில் கோயில்களில் ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்த மணமக்களுக்கு திருமணங்கள் நடத்தி, சீர்வரிசை பொருட்களை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில், குளத்தூர் வட்டத்தைச் சேர்ந்த 3 ஜோடிகளுக்கான திருமணங்களை நடத்தி வைத்து, ரூ.50,000 மதிப்பிலான 4 கிராம் திருமாங்கல்யம், மணமகன், மணமகள் ஆடை, மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை, 2 தலையணைகள், பாய், 2 கைகடிகாரம், மிக்ஸி, பூஜை பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் 20 நபர்களுக்கு உணவு உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த மணமக்களின் வாழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் ஒளியேற்றி வைத்துள்ளார். எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி, தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன், எம்எல்ஏ முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர்செல்வி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்.அனிதா, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post முத்துமாரியம்மன் கோயிலில் 3 ஜோடிகளுக்கு திருமணம் அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி மக்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Muthumariamman temple ,Pudukottai ,Thiruvapur Muthumariamman temple ,Hindu Religious Charities Department ,
× RELATED திருவாடானையில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்