
பெரம்பலூர், செப். 12: பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்டக் கலெக்டர் கற்பகம் நேற்று திடீர் ஆய்வுசெய்தார். அப்போது மாணவ மாணவிகளுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். மேலும் அப்பள்ளியின் உணவுக்கூடம், அதில் சமையல் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறை, சமையலுக்கான பாத்திரங்கள் வைக்கும் அறை ஆகியவை சுகாதாரமாக பராமரிக்கப்படுகின்றதா? பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு பொருட்களின் இருப்பு உள்ளதா? என்பது குறித்தும் பார்வையிட்டார்.
மாண மாணவிகள் சத்தான உணவு உட்கொண்டு நல்லமுறையில் கல்வி பயில வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தினை முறையாக செயல்படுத்தவேண்டும்.
குறிப்பாக நம் வீட்டு குழந்தைகளுக்கு எவ்வளவு தரமாக, சுகாதாரமாக உணவு வழங்குகிறோமோ அதைப்போலவே ஒவ்வொரு பள்ளி குழந்தைகளுக்கும் உணவு வழங்க வேண்டும் என்று அங்கிருந்த சமையலருக்கும், துறை அலுவலர்களுக்கும் மாவட்டக் கலெக்டர் கற்ப கம் அறிவுறுத்தினார்.
The post பெரம்பலூர் அருகே முத்துநகர் அரசு பள்ளியில் காலை உணவுத் திட்டம் ஆய்வு appeared first on Dinakaran.