×

விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூர், செப். 12: சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சமூகநீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்தவதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000 வழங்கப்படுகிறது. (ரூ. 5 லட்சம்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

2023ம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ வழங்க உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்கைத் தரத்தினை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டர்க்கு அனுப்பி வைக்கலாம். தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசிநாள் செப்டம்பர் 15. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (அறை எண்-16) தொடர்பு கொள்ளலாம். 2023ம் ஆண்டு சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

The post விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,District Collector ,Annemarie ,Dinakaran ,
× RELATED 16 பள்ளிகள் பங்ேகற்பு அரியலூர்...