
காரைக்கால், செப்.12: ஒவ்வொரு ஆண்டும் செப்.27ம் தேதி உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்படுகிறது. இதை அடுத்து காரைக்காலில் சென்றாண்டை போல் கொண்டாடப்படுவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் குலோத்துங்கன் தலைமை வகித்தார். மேலும் ஆலோசனை கூட்டத்தில் வனத்துறை அதிகாரி விஜி, துணை மாவட்ட கலெக்டர் ஜான்சன்(வருவாய்), காவல் கண்காணிப்பாளர்கள் நிதின் கவுகால் ரமேஷ்(வடக்கு), சுப்பிரமணியன் (தெற்கு) மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மினி மாரத்தான், பீச் வாலிபால், படகு போட்டி, கபடி போட்டி மற்றும் கலை நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடத்துவது சம்பந்தமாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர், மருத்துவ வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார். பொதுமக்களுக்கு சென்று வர பேருந்து வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியும் தயார் நிலையில் இருக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.
The post 27ம் தேதி கொண்டாடப்படும் உலக சுற்றுலா தினவிழா ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.