×

பாலாற்று படுகையில் அதிகளவு கிடைக்கும் ராஜ ராஜன் காலத்தை சேர்ந்த வெள்ளி, செப்பு நாணயங்கள்: ஆய்வு மேற்கொள்ள அரசுக்கு பேராசிரியர் கோரிக்கை

சென்னை: ராஜராஜ சோழன் காலத்தை சேர்ந்த வெள்ளி, செப்பு நாணயங்கள் அதிகளவு பாலாற்று படுகையில் பெருமளவு கிடைப்பதால், அங்கு தொல்பொருள் துறையினர் ஆய்வு மேற்கொள்ள எடுக்க வேண்டும் என அரசு கல்லூரி பேராசிரியர் கோரிக்கை வைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அரசர் கோவில் கிராமத்தை சேர்ந்தவர் மதுரைவீரன்(40). இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் வரலாற்று துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 13 ஆண்டுகளாக பாலாற்று படுகை பகுதியில் கிடைக்கும் தொல்பொருள்களை சேகரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பாலாற்று படுகையில் அரசர்கோவில், பாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாலாற்று படுகையில் ஏராளமான தொல்பொருள்கள் கற்கால ஆயுதங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வல்லிபுரம்-ஈசூர் பாலாற்றுப் படுகையில், ராஜராஜ சோழன் வெளியிட்ட இரண்டு செப்பு நாணயங்கள் மற்றும் முத்திரை பதித்த வெள்ளி நாணயம் கிடைத்துள்ளது.பெருங்கற்கால மனிதர்கள் விவசாயம் செய்வதற்கும், வேட்டையாடுவதற்கும் பயன்படுத்திய கற்கோடரி உள்ளிட்ட கற்கருவிகள், முழுமையான கருப்பு-சிவப்பு பானை, வட்டச் சில்லுக்கள், இரும்பு பொருட்கள், இரும்பு கத்திகள், பண்டைய கால செங்கற்கள் தற்போது,கீழடியில் கிடைத்த, கண்மை (அஞ்சனம்) கண் இமைகளை தீட்டும் பழக்கம் சங்ககால பெண்களிடையே காணப்பட்டது.

கண்மை கண்களை வசீகரமாக்க பயன்படும் ஒப்பனை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏராளமான மணிகள், ஆண், பெண்கள் அணியும் மெட்டிகள், காதணிகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் மேற்பரப்பில் செய்யும் கள ஆய்வின் போது பல அரிய பொருட்கள் கிடைப்பதாகவும், முறையாக திட்டமிட்டு அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் பாலாற்று நாகரீகமும் இந்த உலகத்திற்கு தெரியவரும். அரசு இந்த பாலாற்று படுகையில் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இவருடைய கோரிக்கையாக உள்ளது. இவருடைய தேடலில் அதே பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி வரலாற்று ஆசிரியர் வடிவேலும் உதவி வருகிறார்.

The post பாலாற்று படுகையில் அதிகளவு கிடைக்கும் ராஜ ராஜன் காலத்தை சேர்ந்த வெள்ளி, செப்பு நாணயங்கள்: ஆய்வு மேற்கொள்ள அரசுக்கு பேராசிரியர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palattu basin ,Chennai ,Palatu Basin ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...