×

ஆதிதிராவிடர் வீட்டு வசதி திட்டத்தில் கடன் பெற்றவர்கள் அசல் தொகையை செலுத்தினால் வட்டி, அபராத வட்டி ரத்து: சென்னை கலெக்டர் அருணா தகவல்

சென்னை: ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்கள் அசல் தொகை செலுத்தினால் வட்டி,அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தில் கீழ் 1990- 91 முதல் 2011-12 ஆண்டுவரை கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை ’ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தில்’ கீழ் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று வழங்கப்படும். எனவே இந்த கடன் நிதி உதவி திட்டத்தில் கடன் உதவி பெற்ற பயனாளிகள், அசல் தொகையினை செலுத்தி பயன்பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டம் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை செயல்படுத்தப்படும்.

The post ஆதிதிராவிடர் வீட்டு வசதி திட்டத்தில் கடன் பெற்றவர்கள் அசல் தொகையை செலுத்தினால் வட்டி, அபராத வட்டி ரத்து: சென்னை கலெக்டர் அருணா தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Aruna ,Adi Dravidar Housing Facility ,National Sanitation Worker Development Corporation ,
× RELATED மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை: 1098-க்கு தகவல் தரலாம்