×

சுகாதாரத்துறை அதிகாரி தகவல் டெங்கு காய்ச்சலை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை: டெங்குவை தடுக்க காய்ச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இது குறித்து சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழ்நாட்டில் கொசு உற்பத்தியை தடுக்க அரசு, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக இது வரை 253 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரை 3 பேர் டெங்கு பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.

டெங்கு பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படி, உள்ளாட்சி அமைப்புகளையும் மிகத் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு, கொசு ஒழிப்பு பணிகளை மிகத்தீவிரமாக மேற்கொண்டு டெங்கு பாதிப்பினால் ஏற்படும் இறப்பு விகிதத்தை தீவிரமாக குறைத்து வருகிறார்கள். 2019 ம் ஆண்டு டெங்குவால் 8527 பேர் பாதிக்கப்பட்டனர்.ஆனால் கடந்த ஆண்டு 6430 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வருடாவருடம் டெங்கு பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு இது வரை 2,12,121 பேர் பரிசோதனை செய்ததில் 253 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்த பாதிப்பை மேலும் கட்டுப்படுத்த 21,695 கொசு ஒழிப்பு பணியாளர்கள் (DBCS) பணியாற்றி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் கொசு மருந்து அடிக்கும் 16,005 இயந்திரங்கள், டெமிபாஸ் என்று சொல்லப்படும் மருந்து 4,94,241 லிட்டர், பைத்திரியம் மருந்து 6,67,831 லிட்டர் , டெக்னிகல் மாலத்தியான் மருந்து 1,27,541 லிட்டர் கையிருப்பில் உள்ளது. அதுமட்டுமின்றி 318 மருத்துவர்கள், 635 செவிலியர்களும் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் டெங்குவை தடுக்க காய்ச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவமு காம் நடைபெற்று வருகிறது.

The post சுகாதாரத்துறை அதிகாரி தகவல் டெங்கு காய்ச்சலை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Health Department Officer Information Special Medical Camp ,Chennai ,Director of the ,Department ,of ,Health ,Health Department Official Information Special Medical Camp ,Dinakaran ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...