×

தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதையில் பாசி படர்ந்த சாலையால் விபத்து: சீரமைக்க கோரிக்கை

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை சாலை சிதிலமடைந்து, பாசி படர்ந் துள்ளதால் வானக ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, இதை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். nஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழை காலத்தில் மட்டுமல்லாது வெயில் காலத்திலும் தண்ணீர் கசிந்து கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக இங்குள்ள சிமென்ட் சாலை சிதிலமடைந்து பாசிபடர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.

பல வாகனங்கள் சுறுக்கி விழாமல் இருக்க மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இரவில் பலர் தடுமாறியபடி செல்கின்றனர். இப்பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் என பல துறையினர் குடியிருந்தபோதிலும் இந்த பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. தினம்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லக்கூடிய இந்த சுரங்கபாதையினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அந்தப்பகுதி மாநகராட்சி கவுன்சிலர் சாலமோன் கூறுகையில், ‘‘தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதையில் தண்ணீர் கசிவதை சீர்செய்து தருமாறு கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசியுள்ளேன். நெடுஞ்சாலைதுறையினர் விரைவில் நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளனர்,’’ என்றார்.

The post தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதையில் பாசி படர்ந்த சாலையால் விபத்து: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thillai Ganga ,Nagar ,accident ,Alandur ,Aadambakkam ,Thillai Ganga Nagar ,Dinakaran ,
× RELATED தி.நகர், மேற்கு மாம்பலத்தில் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி