- ஜாத்திரை உற்சவம்
- திருவள்ளூர் கிராம தேவதை வேம்புலி அம்மன் கோவில்
- திருவள்ளூர்
- திருவள்ளூர்
- ஸ்ரீ வேம்புலி
- அம்மன்
- ஜாத்திரை உற்சவம்
- வேம்புலி அம்மன் கோவில்
திருவள்ளூர்: திருவள்ளூர் கிராம தேவதையாக இருக்கும் ஸ்ரீ வேம்புலி அம்மனுக்கு ஜாத்திரை உற்சவத்தை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த 1ம் தேதி விழா தொடங்கியது.
அன்று அதிகாலை 2 மணி அளவில் அம்மனுக்கு அபிஷேகமும், காலை சிம்ம லக்னத்தில் ஸ்ரீ வேம்புலி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை அம்மன் புறப்பாடும், புடவை சாற்றுதல், புஷ்ப சாத்துப்படி, பந்தல் அமைப்பு பணிகளும், கிராம வேலை ஆட்களுக்கு மரியாதை துணி வழங்கும் நிகழ்ச்சியும், முன் வாசல் முகப்பு புஷ்ப அலங்காரமும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 2ம் தேதி முதல் காலை நேரத்தில் அபிஷேகம் மற்றும் புஷ்பா அலங்காரமும், 5ம் நாள் கோல(ம்) கொண்ட அம்மன் சேவா டிரஸ்ட் சக்திகள் சார்பில் கோல(ம்) கொண்ட அம்மன் கோயிலில் இருந்து ஸ்ரீ வேம்புலி அம்மன் கோவிலுக்கு சீர்வரிசையை முகமது அலி தெரு, பஜார் வீதி, வடக்கு ராஜ வீதி, காக்களூர் சாலை வழியாக கொண்டு வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் தினமும் காலை நேரங்களில் அபிஷேகமும், புஷ்ப அலங்காரமும் நடைபெற்றது.
பிறகு 7ம் தேதி இரவு 9 மணிக்கு நாடகமும், 8ம் தேதி இந்து நாத சங்கமும் நடைபெற்றது. 9ம் தேதி நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் பெண்கள் தீச்சட்டி ஏந்தி வேண்டுதலை நிறைவேற்றினார். இரவு 9 மணிக்கு பால் கும்பமும், 11 மணியளவில் நாடகமும் நடைபெற்றது. ஜாத்திரை உற்சவத்தின் இறுதி நாளான நேற்று காலை 7 மணியளவில் அபிஷேகமும், புஷ்ப அலங்காரமும் நடைபெற்றது. மேலும் இரவு அம்மன் வீதி புறப்பாடு நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருவிழாக்குழு, அருள்மிகு ஸ்ரீ வேம்புலி அம்மன் சேவா சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
The post திருவள்ளூர் கிராம தேவதையான வேம்புலி அம்மன் கோயிலில் ஜாத்திரை உற்சவம் நிறைவு appeared first on Dinakaran.