×

மின் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

புழல்: செங்குன்றம் பாலகணேசன் நகரை சேர்ந்த ராஜா என்கிற மச்சவல்லி ராஜா(35). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று மாலை செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி அருகே உள்ள உயரழுத்த மின் கோபுரம் மீது, பெட்ரோல் கேனுடன் ஏறிய ராஜா தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

தகவலறிந்த சோழவரம் போலீசார் மற்றும் செங்குன்றம் தீயணைப்பு துறையினர் ராஜாவை மீட்பதற்காக, அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர் தன்னை தொந்தரவு செய்யும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து சமாதானம் செய்தனர். இதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள் கொண்டு வந்த ஏணி உதவியுடன் ராஜாவை பத்திரமாக மீட்டனர்.

The post மின் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Machhavalli Raja ,Raja ,Sengunram Balaganesan ,
× RELATED தமிழ்நாடு செமிகண்டக்டர் தயாரிப்பு...