×

விஷம் வைத்து 2 புலிகள் கொலை

ஊட்டி: நீலகிரி வன கோட்டம், ஊட்டி தெற்கு வனச்சரகம், எமரால்டு, நேருநகர் பாலம் அருகே அவலாஞ்சி அணை உபரி நீர் வெளியேறும் நீரோடை மற்றும் வனத்திற்குள் 8 வயது மற்றும் 3 வயது மதிக்கத்தக்க இரு ஆண் புலிகள் இறந்து கிடந்தன. அருகில் முழுவதும் அழுகிய நிலையில் பசு மாட்டின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் உடலில் விஷம் வைத்து புலிகள் கொல்லப்பட்டதா? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரித்தனர். இதில் எமரால்டு பகுதியை சேர்ந்த சேகர் என்பவர், வனவிலங்கு வேட்டையாடி தனது பசுவை கொன்று போட்டிருப்பதை பார்த்து ஆத்திரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை அதில் தெளித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து சேகர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

The post விஷம் வைத்து 2 புலிகள் கொலை appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris Forest Division ,Ooty South Forest Division ,Emerald ,Avalanche dam ,Nehrunagar ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் நடவு பணிகளுக்காக ஊட்டி...