×

கால்நடைகள் கடத்தல் வழக்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு அபிஷேக் பானர்ஜி நாளை ஆஜர்?

கொல்கத்தா: கால்நடைகள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு 13ம் தேதி ஆஜராகுமாறு மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி எம்பிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அபிஷேக் டிவிட்டரில் பதிவிடுகையில், இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டம் நடக்கும் அதே தேதியில் விசாரணைக்கு வரும்படி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைப்பு கமிட்டியில் நான் உறுப்பினர். வசதியாக அதே நாளில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். இதில், 56 அங்குல மார்பு மாதிரியின் கோழைத்தனம் மற்றும் ஊசலாட்டத்தன்மையை காட்டுகிறது என பிரதமரை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே, அமலாக்கத்துறை விசாரணையில் அபிஷேக் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கால்நடைகள் கடத்தல் வழக்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு அபிஷேக் பானர்ஜி நாளை ஆஜர்? appeared first on Dinakaran.

Tags : Abhishek Banerjee ,Kolkata ,Mamata Banerjee ,Dinakaran ,
× RELATED போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களை...