×

கனடா பிரதமரின் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

புதுடெல்லி: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக தனது பிரதிநிதிகள் குழுவுடன் வெள்ளியன்று டெல்லி வந்தார். ஜி20 மாநாடு முடிந்து நேற்று முன்தினம் மாலை அவர் கனடா திரும்புவதற்கு இருந்தார். இந்நிலையில் கனடா பிரதமர் வந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக பிரதமர் ஜஸ்டின் மற்றும் பிரதிநிதிகள் குழு கனடா புறப்பட்டு செல்ல முடியாமல் டெல்லியிலேயே தங்கினார்கள். இது குறித்து கனடா பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,‘‘ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை பிரதமரின் பிரதிநிதிகள் குழுவினர் இந்தியாவில் தங்கி இருப்பார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கனடா பிரதமரின் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Justin Trudeau ,Delhi ,G20 ,Dinakaran ,
× RELATED கனடா பிரதமர் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: இந்தியா கண்டிப்பு