×

திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ரீடத்தான் – 2 போட்டி

திருவள்ளூர்: திருவள்ளூர், ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரீடத்தான் – 2 என்கிற மாவட்ட அளவிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு பள்ளி தாளாளர் ப.விஷ்ணுச்சரண் தலைமை தாங்கினார். இயக்குனர் பரணிதரன், துணை முதல்வர் கவிதா கந்தசாமி, தலைமை ஆசிரியர்கள் ஷாலினி, சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர் சதீஷ், நூலகர்கள் கவிராஜ், ஆனந்தவல்லி ஆகியோர் வரவேற்றனர். பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப் போட்டியை தொடங்கி வைத்து பேசினார்.

நூலகம் உருவாவதற்கு காரணமான நூலகத் தந்தை என்று அனைவராலும் அழைக்கப்படும் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு இடையே கதை கூறுதல், செய்தி வாசித்தல், வினாடி வினா, புத்தக மதிப்பீட்டுப் போட்டி என 9 வகையான போட்டிகள், தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் நடைபெற்றன. இந்த மாவட்ட அளவிலான போட்டியில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் மத்திய அரசு பள்ளிகள் என 24 பள்ளிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது தனித்திறனை வெளிக்கொண்டு வந்தனர்.

நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ப.விஷ்ணுசரண் பேசும்போது, ஒவ்வொரு மாணவனும், ஆசிரியரும், பெற்றோரும் வாசிப்பு பயிற்சியையும், எழுத்து பயிற்சியையும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும், தினந்தோறும் செய்தித்தாளைப் படிக்க வேண்டும், பல்வேறு வகையான புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்ற தத்துவஞானியாகவும், அன்னை தெரசாவைப் போன்ற மனிதநேயப் பண்பாளராகவும், அப்துல் கலாம் போன்ற அறிவியல் மேதையாகவும் மாற புத்தக வாசிப்பு மட்டுமே துணை புரியும் என்று, ஒவ்வொரு புத்தகமும் நமக்கான வழிகாட்டி, இந்த போட்டி வருங்காலத்தில் மாநில அளவிலான போட்டியாக நடைபெறும் என்று தெரிவித்தார்.

The post திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ரீடத்தான் – 2 போட்டி appeared first on Dinakaran.

Tags : Tiruvallur Sree Niketan School School ,Readathon – 2 Competition ,Tiruvallur ,Readathon – 2 ,Sri Niketan Matric Higher Secondary School ,Thiruvallur.… ,Sri Niketan School ,Thiruvallur ,
× RELATED திருவள்ளூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை